காதல் ஜோடிகள் ஆகட்டும் புதுமண தம்பதிகள் ஆகட்டும் அவர்களின் சுற்றுலா பட்டியலில் தவிர்க்கமுடியாத இடமாக இருப்பது மாலத்தீவு. கொரோனா பாதிப்பால் இரண்டு வருடங்களாக வீட்டிலேயே இருந்து சோர்ந்து போன மக்களும் நிம்மதியாக ஓய்வெடுக்க மாலத்தீவு செல்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இப்படி நினைத்துக்கொண்டு, திருமணமான ஒருவரும் மாலத்தீவுக்குச் சென்று மகிழ்ந்தார்.
இதில் என பிரச்சனை என்று கேட்கிறீர்களா ? இங்கு தான் பிரச்சனையே.. அவர் சென்றது மனைவியுடன் அல்ல,அவரின் காதலியுடன்.. மும்பையை சேர்ந்த 32 வயதான பொறியாளர் ஒருவர், சமீபத்தில் இவரது மனைவி அலுவலக வேலையாக வெளியூர் சென்றதை ஒரு பொன்னான வாய்ப்பு என நினைத்து தனது காதலியுடன் மாலத்தீவு சென்று ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்.
எதிர்பார்த்தபடி அவரின் மனைவியும் வெளியூர் சென்றார்.இதையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி காதலியை கூட்டிக்கொண்டு மாலத்தீவு சென்று குதூகலமாக இருந்துள்ளார்.இதற்கிடையில்,வாட்ஸ் அப் அழைப்புகளை எடுக்காதலால் கணவர் மீது சந்தேகம் வந்துள்ளது அவரின் மனைவிக்கு.
இதனால் திட்டமிட்ட நாட்களுக்கு முன்பே அங்கிருந்து புறப்பட்டனர் அந்த ஜோடி.மாலத்தீவுக்குப் பயணம் செய்தது தெரிந்தால் மனைவி தன்னைக் கொன்றுவிடுவாளோ என்று பயந்து,பாஸ்போர்ட்டின் சில பக்கங்களை கிழித்துவிட்டு இந்தியாவுக்கு புறப்பட்டனர்.
மும்மை விமான நிலையத்தையும் வந்தடைந்தார் அந்த நபர்.இங்கு எப்பவும் போல சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அப்போது இவரின் பாஸ்ப்போர்ட்டில் இடையே சில பக்கங்களை காணாததால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இதுபற்றி அவரிடம் கேட்டபோது எந்த பதிலும் அளிக்காததால், மோசடி மற்றும் போலி வழக்குகளில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், தான் செய்ததை அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார் அந்த நபர்.சரி… உங்களில் யாரெல்லாம் மாலத்தீவு சென்றுள்ளீர்கள் ?