பாட்னா காவல்துறையின் கான்ஸ்டபிள் ஒருவர் எடுத்த புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.பாட்னா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த மாதம் பள்ளி சங்கம் மாணவர்களுக்கு விழா ஒன்று ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கலந்துகொண்டார்.
அவருடன் காவல்துறை அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.அப்போது , பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிளுடன், மாணவர்கள் அரசு ஆயுதங்களை கையில் ஏந்தியபடி புகைப்படம் எடுத்தது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாணவர்கள் அவரின் கைத்துப்பாக்கியை கையில் பிடித்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.இதைச் செய்யும் அனைத்து மாணவர்களும் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கையில் பேனா இருக்க வேண்டிய மாணவர்கள் கைத்துப்பாக்கியை பிடிக்க ஆர்வம் காட்டியுள்ளனர் என்பது வருத்தத்திற்கூறிய ஒன்று என்று பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர்.