“அண்ணனா நினைச்சு  மறந்துடு” – வைரல் பிரேக் அப் கடிதம் 

200
Advertisement

சமூக வலைதளங்களில் காதலர் ஒருவர் தனது காதலிக்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது. பொதுவாக காதலர்கள் கடிதத்தில் கவிதைகள் இடம்பெற்றுருக்கும்.ஆனால் இங்கோ காதலியை  பிரேக் அப் செய்ய கடிதம் எழுதியுள்ளார்  ஒருவர்.

அந்த கடிதத்தில் , ” அன்புள்ள சுப்ரியா, பொருள் : பிரிந்து செல்ல வேண்டும் , என் அன்பான முன்னாள் காதலி, இந்த 21 ஆம் நூற்றாண்டில், என்னைப் போன்ற பையன், உன்னைப் போன்ற தந்திரமான பெண்ணுடன் உறவு கொள்ளத் துணிவில்லை!

எனவே, உங்களுடன் என் உறவை முடித்துக்கொள்ள  விரும்புகிறேன்.இதுவரை, நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை மூத்த சகோதரனாக நினைத்து மன்னிக்கவும்.

இப்படிக்கு , முன்னாள் காதலன்-தற்போதைய மூத்த சகோதரர்  சுஜன் ”

என எழுதியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பலரும் இதற்கு வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.