Friday, August 8, 2025
HTML tutorial

“நான் ரெண்டுபேரையும் காதலிக்கிறேன் சார்” KRK பட பணியில் நடந்த திருமணம்

“நான் ரெண்டுபேரையும் காதலிக்கிறேன் சார் ” என விக்னேஷ் சிவன் இயக்கிய  பட பாணியில்  நிஜமாகவே ஒருவரின் வாழ்வில் நடந்துளளது.ஜார்கண்டின் லோஹர்டகா கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த கிராமத்தில் வசிப்பவர் தான் சந்தீப்,இவர் மூன்று வருடங்களாக குசும் லக்ரா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார், இவர்களுக்கு ஒரு குழந்தைகூட இருக்கிறது.இதற்கிடையில் , சமீபத்தில் வேளைதொடர்பாக சந்தீப் மேற்கு வங்கம் சென்றுள்ளார்.

இவருடன் ஸ்வாதி குமார் என்ற பெண்ணும் வேலை ரீதியாக உடன் பயணித்துள்ளார்.இவர்களின் தொடர்பு காதல்வரை வந்துள்ளது.சந்தீபின் இரு காதலும் அனைவருக்கும் தெரியவர , ஊர் பஞ்சாயத்தில் இரு வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் சந்தீப் அந்த இரு பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தீர்ப்பளித்து விட்டார்கள்.

இது குறித்து சந்தீப் கூறுகையில் ” நான் அந்த இரண்டு பெண்களையுமே காதலிக்கிறேன் சார், காட்டுனா இருவரையும் தான்” கட்டுவேன்னு கூறிய  சந்தீப் ,இறுதியில் ஒரே நேரத்தில் இருவரையும் திருமணம் செய்துகொண்டார் சந்தீப்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News