அபராதம் விதித்த காவலர்-“காவல்நிலையத்தையே பழிவாங்கிய நபர் “

222
Advertisement

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான பழிவாங்கும் சம்பவம் நடந்துள்ளது.பகவான் ஸ்வரூப் என்பவர் லைன் மேனாக உள்ளார்.இந்நிலையில்  சில தினங்களுக்கு முன்,அவர் சாலையில் தன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது,குறிப்பிட்ட சாலையில்  வாகன சோதனைக்காக  அவரை நிறுத்தியுள்ளனர் போக்குவரத்து காவலர்கள்.பின்,அவரிடம் வாகத்திற்கான   ஆவணங்களைக் காண்பிக்கும்படி  கேட்ப்பட்டுள்ளது. ஸ்வரூப் , ஆவணங்கள் தன்னிடம் இல்லை எனவும் , வீட்டிற்குச் சென்று கொண்டுவருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்ஸ்பெக்டர் அவர் பேச்சை கேட்காமல், 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

ஆத்திரமடைந்த . ஸ்வரூப் , அன்று இரவு சம்பந்தப்பட்ட  காவல் நிலையத்தின் மின்சாரத்தை துண்டித்துள்ளார் .இதையடுத்து,காவல் நிலையத்திலிருந்து, மின்சாரம் துண்டிக்கப்படத்திற்கு காரணம் கேட்ப்பட்டது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வரூப், காவல்நிலையத்தில் மின் வினியோகத்தில் மீட்டர் இல்லை என்றும், இது சட்டவிரோதமானது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக காவல்துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.