பேருந்தில் ஏறின ஒடனே “இந்தாங்க தண்ணீர் குடிங்க..” மனதைக் கவரும் நடத்துனர்.

318
Advertisement

சமீப நாட்களாக நாட்டில் வெயில் வாட்டி வருகிறது.வெப்பத்தை எதிர்கொள்ள மக்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்குமாறு அவ்வப்போது கூறிவருகிறது சம்மந்தப்பட்ட மாநில அரசுகள்.கடும் வெப்பத்தை எதிர்கொள்ள தாகம் இல்லை என்றாலும், தினமும் குறைந்தது 5 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

இந்நிலையில்,ஹரியானாவில் பேருந்து நடத்துனரின் செயல் ஒன்று இணையத்தில் இதயங்களை வென்றுவருகிறது.ரோஹ்தக்கைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் சுரேந்திர ஷர்மா, பேருந்தில் ஏறும் ஒவ்வொரு பயணிக்கும் முதலில் அவர்களுக்கு  தண்ணீர் வழங்குகிறார்.

அவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா ரோட்வேஸில் சேர்ந்ததிலிருந்து இதை செய்து வருவதாக கூறப்படுகிறது.பயணிகளிடம் இவர் காட்டும் அக்கறை பலரையும் வியப்படைய செய்துள்ளது.அவர் பேருந்தில் பயணிகளுக்கு தண்ணீர் கொடுக்கும்  புகைப்படத்தோடு தன் ட்விட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்துள்ளார் ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண்.