மைதானத்தில் நடைபெறும் விளையாட்டு பேட்டிகளில் வேடிக்கையான தருணங்கள் நிகழ்வது வழக்கமான ஒன்று.ஆயிரம் கணக்கான மக்கள் ஒரு இடத்தில் கூடி தாங்கள் விரும்பும் அணி விளையாடுவது கண்டு ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுவார்கள்.
அமெரிக்காவில் மிக பிரபலமான விளையாட்டு போட்டிகளில் பேஸ்பால் விளையாடும் ஒன்று.இதற்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டை ஹார்ட் ரசிகர்கள் உள்ளனர்.சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்று, ரசிகர்களுக்கு மறக்கமுடியாத வேடிக்கையான அனுபவத்தை கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது ராட்சத அணில் ஒன்று மைதானத்திற்குள் நுழைந்துவிட்டது.
மைதானத்தின் மேல்நிலை கம்பிகளில் இருந்து அணில் குதித்ததால் பேஸ்பால் போட்டி பல நிமிடங்கள் தடைபட்டது. மைனர் லீக் பேஸ்பாலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “SQUIRREL DELAY” என்ற தலைப்புடன் அணில் செய்த சேட்டைகளை பகிர்ந்த்துள்ளனர்.
அதில்,மைதானத்தில் குதித்த அணிலை பிடிக்க முதலில் விளையாட்டு வீரர்கள் முயற்ச்சி செய்கின்றனர்.அணிலை வளைத்து பிடிக்கவும் முயற்சி செய்கின்றனர்,ஆனால் வீரர்களுக்கு பிடிபடவில்லை.
வீரர்களுக்கு ஆட்டம் காட்ட,மைதான பாதுகாப்பாளர்கள் களத்தில் இறங்கினர்.ஆனால் அவர்களை ஒரு கை பார்த்துவிட்டது அந்த அணில்.சரி ஆய்தத்தை பயன்படுத்த நேரம் வந்துவிட்டது என முழு திறமையை பயன்படுத்தி அணிலை பிடிக்க அடுத்தகட்ட முயற்சியில் இறங்கினர் பாதுகாப்பாளர்கள்.
கைகளில் பக்கிட்களை எடுத்துக்கொண்டு,அணிலை துரத்த தொடங்கினர்.”யாருகிட்ட உங்க வேலைய காட்டறீங்க” என்பது போல நினைத்த அணில்,அவர்களை ஒரு வலி பணிடிச்சி.ஒருகட்டத்தில் பாதுகாவலர் ஒருவர் அணிலை தன் இரு கைகளில் அமுக்கி பிடித்துவிட்டார்.பின், பிடிபட்ட அணிலை பத்திரமாக அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு விளையாட்டு மீண்டும் தொடங்கியது.
விளையாடி நிறுத்திவிட்டு அணிலுடன் விளையாடிய வீரர்கள் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.