தன் நாயை “பட்டதாரி” ஆகிய பெண்

357
Advertisement

மனிதனின் செல்லப்பிராணிக்கான முதல்  தேர்வு நாயக தான் இருக்கமுடியும்.மனிதனின் உணர்வுகளை புரிந்துகொண்டு நடக்கும் நாய்கள்.பலர் தங்கள் வாழ்க்கையில் இவை  மட்டுமே இருந்தால் போதும் என வாழ்க்கையை முழுமையாக தன் செல்லபரணிக்காகவும்,ஆதரவின்றி தவிக்கும் நாய்களுக்காகவும் அர்ப்பணித்து உள்ளனர்.

தன் செல்லப்பிராணி மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படும் உணர்ச்சிவசப்படுத்தும் தருணங்களை பார்த்துருப்போம்.இங்கும் அப்படி தான் ,இணையத்தில் பகிர்ந்த வீடியோவில்,பெண் ஒருவர் அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில்,தன் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அதையடுத்து , கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது,விழாவில் ஒன்றின் பின் ஒன்றாக மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டு ஒரு கட்டதில் , இந்த பெண்ணை மேடைக்கு அழைத்துள்ளனர்.

https://www.instagram.com/p/CdyumSYpE3w/?utm_source=ig_web_copy_link

மேடைக்கு வந்த அவரை கண்டு அரங்கில் உள்ள மாணவர்கள் கைகளை தட்டியும் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.காரணம் அந்த பெண்,அவரின் செல்லப்பிராணிக்கு தன் போலவே கருப்பு அங்கி அணிவித்து , தலையில் கேப் அணிவித்து பட்டம் வாங்குவதற்கு வந்துள்ளார்.

கல்லூரியின் முதல்வர் பட்டத்தை வழங்கினார்.இந்த சுவாரசியமான தருணத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கதில் பகிர்ந்துள்ளார் அந்த பெண்.அத்துடன் நானும் என் மகளும் இன்று பட்டம் பெற்றோரும் என உணச்சிகரமாக இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.