இரயில் தண்டவாளம் இரயிலுக்கு சந்தமானது என்பதை சில மக்கள் அடிக்கடி மறந்துவிடுகின்றனர்.ஏதோ வீதிகளில் உலாவுவது போல தண்டவாளங்களை கடப்பது,இன்ஸ்டா ரீல்ஸ் செய்வது போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது உண்டு.
இது போன்ற இடங்களில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.ஆபத்தை உணராமல் சிலர் செய்யும் சேட்டை வீடியோக்கள் இணையத்தில் உலா வர,சமீபத்தில் மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், கொல்கத்தாவின் நைஹாட்டி இரயில் நிலையம் சந்திப்பில் நபர் ஒருவர்,ஒரு நடைமேடையில் இருந்து அருகே உள்ள மற்றொரு நடைமேடைக்கு,தண்டவாளத்தை கடந்து செல்கிறார்.இதுல எனா வைரல் இருக்குனு கேக்கறீங்களா ?
அவர் உயரம் குறைவாக இருப்பதால் தண்டவாளத்தை கடக்க ஏணியை உபயோகிக்கிறார்.முதலில் ,தான் நிற்கும் நடைமேடையில் தாண்டவளாத்தை நோக்கி ஏணியை கிழே ஊன்றி நிற்கவைக்கிறார்.பின் சாதனமாக நடைமேடையில் இருந்து தண்டவாளத்துக்கு இறங்க்கிவிட்டார்.
பின்,அந்த ஏணியை கையில் எடுத்துக்கொண்டு,மலமவென மாற்றுரு புறம் சென்று,நடைமேடை மேலே சாய்த்து ஏணியை வைக்கிறார்.பின் சாதாணமாக ஏணியின் மீது ஏறி நடைமேடையை அடைகிறார்.
இதை அங்கிருந்த பயணி ஒருவர் படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.ஆபத்தை உணராமல் இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.