ஒரு பூஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் செடிதானே வளரவேண்டும்.
இங்கு என்ன வருகிறது பாருங்கள், அசந்து போவீர்கள்…
வீட்டுத்தோட்டத்தில் நண்பர்கள் இருவர் பொழுதுபோக்க வருகின்றனர்.
அங்கொரு பூந்தொட்டி உள்ளது.
அவர்களில் ஒருவர் குவளையில் தண்ணீர் எடுத்துவந்து பூந்தொட்டிக்குள்
ஊற்றுகிறார். ஊற்ற ஊற்ற உடனே பூந்தொட்டி மேல்நோக்கி வளர்ந்துகொண்டே
இருக்கிறது.
பூமிக்கடியிலிருந்து அதிவிரைவாக வளரும் அந்தச் செடியின்கீழ்
வட்டவட்ட அருமையான அடுக்கு உள்ளது. ஒவ்வோர் அடுக்கிலும்
தண்ணி சாரி சரக்கு உள்ளது.
குவளைத் தண்ணீர் முழுவதையும் ஊற்றிமுடித்ததும் செடி முழுமையாக
வளர்ந்துவிடுகிறது. நான்கு அடுக்குகொண்ட அந்தச் செடியில் ஒவ்வோர்
அடுக்கிலும் விதம்விதமான தண்ணி மறுபடியும் சாரி சரக்குகள் உள்ளது.
செடியும் வளர்ந்தது . நண்பர்களும் சியர்ஸ் சொல்லி, செடி வளர்ந்ததைக்
கொண்டாடத் தயாராகிவிட்டனர்…
சும்மா ஜாலிக்காகத்தான் இந்த வீடியோங்கறது உங்களுக்கு நல்லா
தெரியும். மக்களோட பெருந்தாகம் தீர்க்க வந்திருக்கும் இந்தச் செடி
இன்னும் பல அடுக்கு வளர்ந்து குடிமக்களுக்குத் தொண்டாற்ற வாழ்த்துவோமா…