இமாச்சல பிரதேசம் சம்பா மாவட்டத்தின் ரைலாவில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியை பார்வையிட சென்றுள்ளார் அம்மாநில சட்டசபை துணை சபாநாயகரும் பாஜக எம்எல்ஏவும் ஆன ஹன்ஸ் ராஜ்.
பள்ளியில் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் உரையாடலில் ஈடுபட்டார்.அது போன்று மற்றொரு வகுப்பறைக்கு சென்ற அவர் அக்குள்ள மாணவர்களிடம் உரையாடிக்கொண்டு இருந்தபோது,அங்கிருந்த மாணவர் ஒருவரிடம் உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்கிறார்.
இதையடுத்து,அருகில் அமிர்ந்தது மற்றொரு மாணவன் சிரித்ததாக சொல்லப்படுகிறது.இதை கவனித்த ஹான்ஸ் ராஜ் , “ஏன் சிரிக்கிறாய்? ” என கேட்டபடி அருகில் சென்று அந்த மாணவனை அறைவது வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதையடுத்து வகுப்பில் மாணவனை அறைந்ததை அவரின் தந்தை மறுத்துள்ளார்.எம்எல்ஏவால் அறைந்ததாக கூறப்படும் மாணவனின் குடும்பத்தினர் இதுவரை புகார் அளிக்கவில்லை.
இதுகுறித்து சிறுவனின் தந்தை ரியாஸ் முகமது,வீடியோ ஒன்றை வெளியீட்டியுள்ளார் அதில், ஹான்ஸ் ராஜ் தனது மகனை அடிக்கவில்லை, ஆனால் “அன்புடனும் பாசத்துடனும் தொட்டார். அவருக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை செய்தியாளர் ஒருவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்,மாணவனின் தந்தை பேசுகையில்,மற்றொருவர் பின்னே இருந்து என்ன பேசவேண்டும் என்பதை அவருக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது எனவும் மாணவனை அறைந்ததற்கு பலர் தங்கள் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.