பலநாட்டு மக்கள் ஒன்றாக வசிக்கும் நாடுகளின் ஒன்று அமெரிக்கா.ஆனால் இங்கு இருக்கும் பிரச்சனைகளில் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருப்பது இனவெறி தாக்குதல்.
நாள்தோறும் இனவெறி தாக்குதல் அரங்கேறிவருவது வருத்தம் அளிக்கக்கூடியதாக உள்ளது.இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இந்திய வம்சாவளி மாணவனை சக மாணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில்,உணவு இடைவேளையில் பள்ளியின் உணவகத்தில் இந்திய வம்சாவளி மாணவன் மேஜை ஒன்றில் அமர்ந்துள்ளார்..
அந்த மாணவனை சுற்றி,சக மாணவர்கள் இருக்க அதில் ஒரு மாணவன் ,இந்திய வம்சாவளி மாணவனை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொன்கிறான்.இதனை அருகில் உள்ள மாணவர்கள் வேடிக்கையாக பார்த்துக்கொண்டு உள்ளனர்.
ஒருகட்டத்தில்,இந்திய வம்சாவளி மாணவனை பின் புறத்தில் கழுத்தை கைகளில் வைத்து மல்யுத்த போட்டியில் வருவது போல இருக்குக்கி மாணவனை பின்னே இழுத்து செல்கிறான்.
கழுத்தை இறுக்கி பிடித்ததால் இந்திய வம்சாவளி மாணவன் சில நிமிடங்கள் மூச்சு விடமுடியாமல் தினறுவதை காணமுடிகிறது.இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது.அதற்க்கு ,இந்திய வம்சாவளி மாணவனான ஷான் ப்ரித்மணி மூன்று நாட்கள் இடைநீக்கமும் மற்றும் ப்ரித்மணியை தாக்கிய சக மாணவனுக்கு ஒரு நாள் மட்டுமே தண்டனையாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பள்ளியில் உணவு இடைவேளையில் மற்ற மாணவர்கள் மத்தியில் இந்திய வம்சாவளி மாணவனை சக மாணவன் அச்சுறுத்தி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பலரும் இந்த வீடியோவை ட்விட்டரில் மத்திய வெளிஉறவுத்துறை அமைச்சருக்கு டேக் செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கைவெடுத்து வருகின்றனர்.