பெற்றோர்களுக்கு குழந்தை எப்போதுமே குழந்தைகள் தான்,அவர்கள் வளர்ந்துவிட்டாலும்.பெற்றோர்கள் தங்களுடன் அதிகநேரம் செலவிடவேண்டும் என்பதே சிறு குழந்தைகளின் ஏக்கமாக இருக்கும்.தற்போது இப்படி தான் பல குழந்தைகளின் நிலை உள்ளது.
குழந்தைகளுடன் தேவையான நேரத்தை செலவிடவேண்டும்.பல பெற்றோர்கள் அவர்களின் வேலைப்பளு காரணமாக,குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை குறைத்துவிட்டனர்.இது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் என மருத்துவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
அதேவேளையில்,குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரத்தை செலவிடுவது, குழந்தைகள் உடன் விளையாடுவது, விளையாட்டிற்காக சீண்டிப்பார்ப்பது போன்ற செயல்களில் பெற்றோர்கள் ஈடுபடும்போது பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கும்.
வெறுப்பேற்றும் பெற்றோரிடம் குழந்தைகள் வெளிப்படுத்தும் கோபமே அழகு தான்.அதனை ரசிக்காதவர்களே இருக்கமுடியாது.இணையத்தில் இது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் ,காரில் உட்காந்து குழந்தை ஒன்று கரும்பு சாறு குடிப்பது போல் உள்ளது. இதற்கிடையில் வீடியோவில் குழந்தையின் தந்தை ‘ஹலோ மோலிக்’ என்று கூறுகிறார். இதைக் கேட்டு கோபமடைந்த அந்த குழந்தை தொடர்ந்து பேசத் தொடங்குகிறது.
தந்தையிடம் கோபமடைந்த குழந்தை, ‘நண்பா, உனக்கு என பிரச்சனையை என்பது போல கேள்வி எழுப்பி, நான் என்ன பண்ணுனா என்ன ? ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் குழந்தைகளுக்கு பிடித்தமானவர்களாக இருக்க விரும்புகிறார்கள்.நீங்க முழு நேரமும் கேமரா உடனே சுற்றிக் சுற்றிக்கொண்டு உள்ளீர்கள். நாள்முழுவதும் முழுவதும், வீடியோ, வீடியோ, வீடியோ!”
என ஆதங்கத்துடன் அனைத்தையம் கொட்டிதீர்த்திவிடும் தன் குழந்தையின் பேச்சைகேட்டு இரண்டு நிமிடம் அமைதியாக இருக்கிறார் அந்த தந்தை,பின் குழந்தையை பார்த்து , ஆமா குழந்தை குடிப்பது கரும்பு சாறா ? இல்ல வேற எதுமா ? என கேட்கிறார். அதற்கு முகத்தில் சிரிப்புடன் இது கரும்பு சாறு தான்,வீடியோ எடுக்காதிங்க என சொல்கிறான் அந்த குழந்தை.
குழந்தையின் கோவம்,மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே தன் தந்தையை கேள்விகேட்பது,தந்தை வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்டதும் ஒரு நொடியில் கோவத்தை மறந்து முகத்தில் புன்னகையுடன் பதில் தரும் இந்த குழந்தையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.