அழகான மற்றும் மிகவும் உறுதியான உறவு என்பது பலரும் நினைப்பது போல காதலிக்கும் நபர்களிடையே இல்லை! இது தந்தைக்கும் மகள்களுக்கும் இடையிலான உறவு தான்.தந்தை என்பவர் தன் மகளை பத்திரமாக கவனித்துக்கொள்வதில் இருந்து , வெவ்வேறு சிரமங்களிலிருந்து அவளைப் பாதுகாக்கிறார்,தன் மகளின் சிறிய பிரச்சினைகளை கூட தீர்க்கிறார் என்பதை விட அதிகமான தொடுதல் எதுவாக இருக்கமுடியும் ?
என்னதான் பத்துமாசம் சுமந்து தாய் பிள்ளைகளை பெற்றிருந்தாலும் , பெண் குழந்தைகள் தந்தையிடமே அதிக நெருக்கமாக இருப்பார்கள்.தந்தை தான் அவளின் நிஜ ஹீரோவாக இருப்பார்.
அவள் வாழ்வில் பின்பற்றும் நற்குணங்கள் அவளின் தந்தையிடம் இருந்தே அதிகம் பழகிருபாள் . தன் தந்தை செய்வதை போலவே தானும் செய்யும் குணம் உண்டு குழந்தைகளுக்கு.அது சில நேரங்களில் வேடிக்கையாகவும் இருக்கலாம்.
https://www.instagram.com/p/Cc52IvND9_0/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.சிறுமி ஒருவர் தன் தந்தையை போலவே நடந்து செல்கிறார்.இதை கவனித்த சிறுமியின் தாய்க்கு முதலில் தெரியவில்லை , பின்பு தான் தெரிந்தது அவளின் தந்தையை போல கைகளை பின்னே கட்டிக்கொண்டு நடக்கிறாள் என்று.
தந்தையிடம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் மகளின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும் என்பதே உண்மை.சிறுமியின் இந்த செயல் இணையத்தில் அனைவரையும் ரசிக்கவைத்துள்ளது.