தெருவில் மூடப்படாமல் இருந்த குழியில் விழுந்த பெண்

260
Advertisement

பலநாடுகளில் உள்ள ஒரே மாதிரியான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. சாலைகளில் அரசு அல்லது தனியார் துறை சார்பாக குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொள்ள குழிகள் வெட்டப்படுவது வழக்கம்.அதேநேரத்தில் வெட்டிய குழியை சில நேரங்களில் மூடாமல் விட்டுவிடுவதும் வழக்கம்.

உதாரணமாக, கட்டிடங்கள் கட்ட போர் போடப்படும் துளைகள் மூடப்படாமல் , குழந்தைகள் விளையாடும் பொது அந்த துளையில் விழுந்து பலியாகும் அவலம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

இது போன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.சிறிய அளவிலான துளைகளில் குழந்தைகள் விழுவது போல , பெரிய அளவிலான துளைகளில் பெரியவர்கள் விழுவதும் தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது.

பாட்னாவில் தெரு ஒன்றில்  பெண் ஒருவர்  போனில் பேசியபடி நடந்து செல்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு முன் ஒரு ஓட்டோ ஒன்று அவரை கடந்து செல்கிறது. சில நொடிகளில் ,அந்த பெண் ஆட்டோ சென்ற வழித்தடத்தில் நடந்து செல்ல ,அங்கு மூடப்படாமல் இருந்த குழியில் விழுந்துவிடுகிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண் உள்ள விழுந்து விட , அருகில் உள்ளவர்கள் வேகமாக அந்த பெண்ணை வெளியே தூக்கிவிடுகிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணிற்கு ஒன்றும் ஆகவில்லை லேசான காயங்களுடன் அங்கிருந்து கடந்துசென்றார்.

சிறிது நேரத்திற்கு முன்  தான் பீகார் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை ஒன்று இறந்தது. அதை சம்பவத்தை தொடந்து மற்றொரு குழியில் நடு வீதியில் திறந்துகிடந்த குழியில் பெண் ஒருவர் விழுந்துள்ளார். நாம்  எங்கு சென்றாலும் கவனத்துடன் இருக்கவேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.