சாலை விதிமுறைகளை மீறுவதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்கள் உயிரை பலிகொடுக்கின்றனர்.வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும், மது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது, ஹெல்மெட் அணிய வேண்டும், சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும், செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது என பல பாட்டுப்பாடுகள் இருந்தும் அதனை அனைவரும் கடைபிடிப்பதில்லை.
அது போன்ற சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் விபத்துக்குளாகின்றன. இது மற்ற வாகன ஓட்டிகளின் உயிரையும் பறிக்கும் அபாயம் ஏற்படுகிறது.நாள்தோறும் செய்திகளில் வாகன விபத்தி தொடர்பான செய்திகள் இடம்பெறாத நாளே இல்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்த வாகன விபத்தின் மனதை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
மங்களூருவில் சாலை ஒருபுறத்தில் வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று சாலையின் பருபக்க எதிரே தாண்டி, ஸ்கூட்டியில் சென்ற பெண் மீது மோதியது.
பிஎம்டபிள்யூ கார், ஸ்கூட்டி மீது மோதியதில், மற்றொரு காரின் அடியில் தூக்கி வீசப்பட்டதால், அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.
அதேநேரத்தில் சாலையைக் கடப்பதற்காக டிவைடரில் நின்றிருந்த மற்றொரு பெண்ணை மிக அருகில் மோதாமல் சென்றதால் அந்த பெண் நூலிழையில் உயிர் தப்பினார்.
விபத்தை ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ கார் டிரைவரை கைதி செய்து விசாரணை நடத்தியதில் கார் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனதை பதைபதைக்க வைக்கும் இந்த சிசிடிவி கட்சி தற்போது வெளியாகியுள்ளது.