இன்று முதல் தொடங்கியது 5ஜி சேவை

297

தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகம் கொண்ட 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதில், ஜியோ, ஏர்டெல், வோடோபோன்-ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன. ஏலத்தில் பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்த அலைக்கற்றை ஏலத்தின் மூலம் அரசுக்கு 1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதைதொடர்ந்து, 5ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் அதிவேக இணைய வசதியான 5ஜி சேவை இன்று தொடங்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்காக டெல்லி பிரகதி மைதானத்தில், இந்திய மொபைல் காங்கிரஸ் என்ற ஆசியாவின் மிகப் பெரும் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 5ஜி சேவையை துவக்கி வைக்க உள்ளார்.