Saturday, March 15, 2025

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 23 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் – ஆய்வில் தகவல்

ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், ஏ.ஐ. துறை குறித்து பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2027ம் ஆண்டிற்குள் ஏ.ஐ., துறையில் திறமையான 23 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ.ஐ., பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.

உலக அளவில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஏ.ஐ., தொடர்பான வேலை வாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Latest news