கிணற்றில் விழுந்த 2 வயது மானை மீட்ட வனத்துறை

383
Advertisement

கோயம்புத்தூரில் உள்ள தனியார் பண்ணையில்  திறந்தவெளி கிணற்றில் விழுந்த மானை மீட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பண்ணை தொழிலாளர்கள் உதவியுடன் , கிணற்றுக்குள் இறங்கி இரண்டு வயது மானை பாத்திரமாக மீட்டனர் வனத்துறை அதிகாரிகள்.

தனது ட்விட்டர் கணக்கில் விலங்குகள் மீட்பு செய்திகளை  அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் சுப்ரியா சாஹு, பயந்துபோன மான் காட்டிற்கு ஓடுவதைக் காட்டும் மீட்புக் காட்சியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், ”தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களின் உதவியுடன் வனத்துறையால் திறந்த கிணற்றில் இருந்து புள்ளி மானை பாதுகாப்பாக மீட்டு விடுவித்தது. திருவள்ளூர் டி.எஃப்.ஓ மற்றும் குழுவினர் சிறப்பாகச் செய்துள்ளனர். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது #TNForest #மீட்பு.” என பகிர்ந்துள்ளார்.

மானை பத்திரமாக மீட்டு  வனப்பகுதியில்  விட்ட வனத்துறையினரை பாராட்டி வருகின்றனர் இணையவாசிகள்.