Saturday, August 2, 2025
HTML tutorial

குளிர்காய்வதற்காக மூட்டிய நெருப்பால் பறிபோன 2 உயிர்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு இடைநிலைக் கல்லூரியில் எழுத்தராக பணிபுரிபவர் மதன் மோகன் செம்வால் (52 வயது). அவரது மனைவி யசோதா தேவி (48 வயது). இவர்கள் நேற்று முன்தினம் இரவு கடும் குளிர் காரணமாக குளிர்காய்வதற்காக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை பூட்டி தூங்கியுள்ளனர்.

அதிலிருந்து வெளியேறிய புகையால் இருவரும் மூச்சு திணறி தூக்கத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து தம்பதியின் உடலை உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தெரிவிக்காமல் தகனம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News