புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்.. ரூ.500 நோட்டு செல்லுமா ?

இந்தியப் பணச் சந்தையில் தற்போதைய காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வந்த போதிலும், ரொக்கப் பணப் புழக்கம் அதிமாகவே உள்ளது, இதனால் புதிய காகித நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த மாற்றுத் திட்டம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வந்தால் தற்போது புழக்கத்தில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்குமா அல்லது அவற்றை மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்துமா என்ற ஒரு மிகப்பெரிய பயமும், கேள்வியும் சாமானிய மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதற்க்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான இந்தத் திட்டம் தற்போது மிகவும் ஆரம்பக் கட்டத்தில் (Preliminary Stage) மட்டுமே உள்ளது. இதன் நன்மைகள் மற்றும் சவால்கள் குறித்து ரிசர்வ் வங்கி விரிவாக ஆய்வு செய்து வருகிறது. இதில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால், தற்போது ஏடிஎம் இயந்திரங்களைப் பிளாஸ்டிக் நோட்டுகளுக்கு ஏற்ப எளிதாக மாற்றியமைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பாலிமர் ரூபாய் நோட்டுகளை முழுமையாகப் பயன்படுத்தி வரும் வேளையில், இந்தியாவும் இந்த டிஜிட்டல் மற்றும் நவீனப் பொருளாதாரப் புரட்சிக்குத் தற்போது தயாராகி வருகிறது.

Related News

Latest News