மூக்கினுள் வளர்ந்த பல்

376
Advertisement

ஒருவருக்கு மூக்கினுள்ளே பல் வளர்ந்து, மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நியூயார்க்கைச் சேர்ந்த 38 வயது இளைஞர் ஒருவர் வலது நாசி வழியாக சுவாசிப்பதில் பல வருடங்களாக சிரமப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குச் சென்று இதுபற்றிக் கலந்தாலோசித்தார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூக்கின் உள்ளே ஒரு வெள்ளை நிறக் கடினமானப் பல் ஒன்று 14 மில்லிமீட்டர் உயரத்துக்கு வளர்ந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

தவறான நிலையில் வளர்ந்துள்ள அது எக்டோபிக் பல் என்று டாக்டர்கள் தீர்மானித்தனர். அதைச் சொன்னபோது அந்த இளைஞர் திகைத்துப்போனார். அந்த எக்டோபிக் பல் அறுவை சிகிச்சைமூலம் அகற்றப்பட்டது.

தற்போது நிம்மதியாக சுவாசிக்கிறார் அந்த இளைஞர்.

உலகளவில் 0.1 சதவிகிதம்பேருக்கு எக்டோபிக் பல் வளர்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.