போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பியோடிய கரடி

470
Advertisement

போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பியோடிய கரடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கலிபோர்னியா மாகாணத்தில்தான் இந்த வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள தஹோ என்னும் ஏரியின் சுற்றுப்புறத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. தற்போது அங்கு குளிர்காலம் நிலவுகிறது. இந்தக் குளிர்காலம் முழுவதும் உறங்குவது கரடிகளின் வழக்கமாகும். ஆனால், வீடுகளுக்குள் புகுந்து உணவு சாப்பிடுவதையே வழக்கமாக்கிய ஒரு கரடியால் அந்தப் பகுதியே தூக்கமின்றி தவித்தது.

குளிர்காலம் என்பதால், கரடிகள் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும், நகருக்குள் வராது என்று எண்ணியிருந்த மக்களுக்கு ஹாங்க் கரடியின் செயல் குளிரைத்தாண்டி நடுங்க வைத்துவிட்டது

ஹாங்க் தி டேங்க் என்னும் பெயர்கொண்ட அந்தக் கரடி ஏரிப் பகுதியிலுள்ள வீடுகளுக்குள் திடீர் திடீரென்று நுழைந்து, வீடுகளில் சமைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு செல்லத் தொடங்கியது. வீட்டுச்சாப்பாட்டின் சுவைக்கு அடிமையாகிவிட்ட அந்தக் கரடி, தொடர்ந்து வீடுகளுக்குள் புகுந்து சாப்பிட்டுவிட்டு சென்றுகொண்டிருந்தது. வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு நன்கு கொழுத்துவிட்ட அந்தக் கரடி. 227 கிலோ அளவுக்கு எடைகூடிவிட்டது.

ஹாங்க் ஊருக்குள் புகுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள், பீன்ஸ் அடங்கிய பைகளை ஊருக்கு வெளியே வைத்தனர். சைரன் ஒலியையும் எழுப்பி வந்தனர். அந்த முயற்சிகளுக்குப் பலன் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் அந்தப் பகுதிவாசிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை விரித்த வலையில் ஹாங்க் சிக்கிக்கொண்டது. அவர்கள் வனவிலங்குத்துறையிடம் ஒப்படைக்க இருந்த நிலையில், காவல்துறை பாதுகாப்பிலிருந்து தப்பியோடி விட்டது ஹாங்க் தி டேங்க் கரடி.

காவல்துறையினரிடமிருந்து கரடி தப்பியோடிய விஷயம் தற்போது கலிபோர்னியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

எங்கே போயிருக்கும்…..

கடுமையான பசி காரணமாக யார் வீட்டுக்குள்ளயாவது புகுந்திருக்குமோ?