ஜுபீட்டர் கிரகத்தில் “பெப்பரோணி புயல்”:வீடியோ வெளியிட்ட நாசா!

472
Advertisement

ஜுபீட்டர் கிரகத்தில் “பெப்பரோணி புயல்”:வீடியோ வெளியிட்ட நாசா!

நாசா, நமது பூமி கிரகத்திற்கு வெளியே உள்ள விண்வெளி அதிசயங்களை வெளிப்படுத்தும் பதிவுகளை இன்ஸ்டாகிராம் வழியாக அவ்வப்போது பகிர்ந்து கொள்வது வழக்கம்.

நாசாவின் பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பதிவுகள் வெறும் தகவல்கள் மற்றும் சுவாரசியத்தை உள்ளடக்கிய போட்டோக்கள், வீடியோக்களாக மட்டுமின்றி அது கல்வி, கற்றலையும் சார்ந்தவைகளாகும்.

அதில் ஒன்று தான் – வியாழன் கிரகம் பற்றி நாசா ஷேர் செய்த ஒரு சுவாரசியமான வீடியோ.

தேசிய பீட்சா தினத்தை கொண்டாடும் வகையில் நாசா ஒரு வீடியோவைப் பகிர்ந்தது.

உடன் “இன்டர்பிளேனட்டரி பீட்ஸா தினம் எப்படி இருக்கிறது?

எங்கள் ஜூனோ மிஷன் வழியாக ஜூபிடர் என்கிற பீட்சாவின் மேல் டாப்பிங் செய்யப்பட்டுள்ள “பெப்பரோனி” புயல்கள் கண்டறியப்பட்டன” என்கிற கேப்ஷனையும் நாசா எழுதியது.

மேலதிக விளக்கத்தில், “நீங்கள் இங்கே என்ன பார்க்கிறீர்கள் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள்: இது வியாழன் கிரகத்தின் வட துருவத்தின் இன்ஃப்ராரெட் (infrared ) காட்சி ஆகும்.

நாசாவின் சோலார் சிஸ்டம் மிஷன் (NASA Solar System Mission) ஆன ஜூனோவில் (JUNO) உள்ள ஜோவியன் இன்ஃப்ராரெட் அரோரல் மேப்பர் (Jovian Infrared Auroral Mapper – JIRAM) கருவியால் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து பெறப்பட்ட படங்களை வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.”

என்றும் நாசா தெரிவித்துள்ளது மேலும் அடுத்த சில வரிகளின் வழியாக, நாசா குறிப்பிட்ட விண்வெளி நிகழ்வைப் பற்றி மேலும் பகிர்ந்து கொண்டது.

நாசாவின் இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது மற்றும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் நாசாவின் இந்த வீடியோவானது, மக்கள் பல்வேறு வகையான கமெண்ட்களை பதிவு செய்யவும் வழிவகுத்துள்ளது.