பிரதமர் மோடிக்காக “கிச்சிடி” சமைத்த  ஆஸ்திரேலிய பிரதமர்

243
Advertisement

“இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாட பிரதமர் மோடிக்கு பிடித்த உணவான கிச்சடியை அன்புள்ள நண்பர் ஸ்காட் மோரிசன் சமைத்தார்” என மத்திய அரசின் ட்விட்டர் பக்கம் ஒன்றில் பகிரப்பட்டு உள்ளது.

https://twitter.com/mygovindia/status/1512990399325163527/photo/1

பிரதமர் மோடிக்கு பிடித்த கிச்சடியை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோடிக்கு சமைத்து அந்த போட்டோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . பிரதமர் மோடி ,பல நேர்காணல்களில் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் நெய்யில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய இந்திய உணவான எளிமையான கிச்சடி தனக்கு  மிகவும் பிடித்தமான உணவு என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் அதை சமைப்பதை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாடும் வகையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்திய உணவுகளை தயாரிப்பதைக் காட்டும் படங்களை இன்ஸ்டாகிராமில் சனிக்கிழமை வெளியிட்டார்.

https://www.instagram.com/p/CcIGEBfrKd6/?utm_source=ig_embed&ig_rid=ed901282-7af1-461f-9032-9876ba45e5dc

அத்துடன் , “இந்தியாவுடனான எங்கள் புதிய வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டாட, இன்று இரவு சமைக்க நான் தேர்ந்தெடுத்தது  எனது அன்பு நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடித்த கிச்சடி என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக , ஆஸ்திரேலியா இந்தியாவுடன் கடந்த  ஏப்ரல் 2 ஆம் தேதி காணொளி மூலம் நடைபெற்ற சந்திப்பில் இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆஸ்திரேலியா-இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் , 85 சதவீத ஆஸ்திரேலிய பொருட்களுக்கும், 95 சதவீத இந்திய பொருட்களுக்கும் வரிவிலக்கு அளிக்கும். இரு நாடுகளுக்கு இடையேயான ஏற்றுமதியை பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருந்துகள், ஜவுளி, பிளாஸ்டிக், பொம்மைகள், பாதணிகள் மற்றும் தோல் உள்ளிட்ட பொருட்களில்  ஆஸ்திரேலியாவின் முக்கிய சந்தைகளில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது.நிலையில் இந்த  புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சீனாவுக்கு மாற்றாக  இந்தியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.