முட்டையின் மஞ்சள் கரு மாரடைப்பை ஏற்படுத்துமா?

322
Advertisement

மலிவான விலையில் பல விதமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவாக முட்டை இருக்கிறது, இதனால் பலரும் முட்டையை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள், ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு சக்தி அதிகம் இருப்பதால் இதனைச் சாப்பிடலாமா என்ற கேள்வி அதிகம் இருக்கிறது, 1980-ல் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் எவ்வித ஆராய்ச்சியும் செய்யாமல், ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவிற்கு மேல் கொலஸ்ட்ராலை உடல் உட்கொண்டால் மாரடைப்பு வரும் என்ற அறிவிப்பை வெளியிட்டது, எனவே முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், பலரும் முட்டை சாப்பிடும் பழக்கத்தை அப்போது விட்டு விட்டனர், ஆனால் 1980 முதல் 2002 ஆம் ஆண்டு வரை பல விதமான ஆராய்ச்சிகள் நடத்தியப் பிறகு, ஒரு நாளைக்கு உடலின் ஜாய்ண்டுகள் (Joint) செயல்பட 1800 முதல் 2000 எம். ஜி. கொலஸ்ட்ரால் கட்டாயம் தேவை என்ற தெரியவந்தது. எனவே அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறிய கருத்து தவறு என்று தெரிந்தது, ஆனால் முட்டையுடம் மாவுச் சத்து அதாவது முட்டை தோசை, பிரட் ஆம்லெட் ஆகிய பொருட்கள் அதிகம் சாப்பிடும் போது பிரச்சனை வருகிறது, அதுபோல முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் சத்துக்கள் கர்ப்பிணிப் பெண்களின் கருவின் மூளை மற்றும் முதுகு பகுதிகளை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து அதிக இருப்பதால், முட்டையின் மஞ்சள் கருவில் ஆபத்தில்லை, ஒரு நாளைக்கு மூன்று முட்டை வரை அதிகபட்சமாகச் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.