“பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

300
Advertisement

பள்ளி மாணவர்கள் பாரம்பரிய நெல் ரகங்களின் அருமைகளை தெரிந்து கொள்ளும் வகையில்,  பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய நெல் விதைகளை பரவலாக்கும் முயற்சியாக, செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில், தேசிய மரபுசார் விதை மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் மற்றும் கடாக்‌ஷசம் உழவர்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் இணைந்து நடத்திய திருவிழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணன், மத்திய வருமான வரி கூடுதல் ஆணையர் நந்தகுமார், முன்னாள் டிஜிபி ஸ்ரீதர் மற்றும் முன்னோடி இயற்கை விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி மாணவர்களுக்கு, பாரம்பரிய நெல் ரகங்களின் அருமைகளை தெரிந்து கொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என்றும், இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்தார்.