கடந்த 12 வருடங்களாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாகவும், அதனால் நலமுடன் இருப்பதாகவும் ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தைசுகே ஹோரி என்பவர் கடந்த 12 வருடங்களாக 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக கூறும் ஹோரி, தூங்கும் நேரத்தை எப்படி குறைப்பது என்பது குறித்து மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
மேலும் இது குறித்து ஹோரியிடம் கேட்டபோது, தானும் எல்லாரையும் போல 8 மணி நேரம் தூங்கியதாகவும், இதனால் பல வேலைகள் பாதித்ததாகவும், அதற்காக தூங்கும் நேரத்தை படிப்படியாக குறைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சில நாட்களில் 30 நிமிடங்களுக்கும் குறைவாகவே தூங்குவதாகவும், இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துளார்.