ஸ்டேட் வங்கியின் வீட்டுக்கடன் வட்டி விகிதம் 6.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் வங்கி விழாக்கால சலுகையாக, வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.7 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. மாத சம்பளதாரர்களுக்கு மட்டுமின்றி, மாத சம்பள வரையறைக்குள் வராதவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
30 ஆண்டு தவணையில் வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், வட்டி விகிதம் குறைப்பால் சுமார் 8 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். கடன் தொகையை பெறுவதற்கான செயலாக்க கட்டணத்தையும் ஸ்டேட் வங்கி முழுமையாக ரத்து செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவத்தை கடல் சிப்பிகளை கொண்டு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.
ஒடிசா மாநிலம் பூரியை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பிறந்தநாளையொட்டி அவர்களது உருவத்தை பூரி கடற்கரையில் மணல் சிற்பமாக வடிவமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி கடல் சிப்பிகள் மற்றும் சங்குகளை கொண்டு அவரது உருவத்தை மணல் சிற்பமாக உருவாக்கியுள்ளார்.