மும்பை பைகுல்லா உயிரியல் பூங்காவில் புது வரவாக 2 பென்குயின்கள் பிறந்துள்ளன.
இதனால் அங்குள்ள பென்குயின்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.
2016-ஆம் ஆண்டில் இந்த பூங்காவிற்கு பென்குயின்கள் கொண்டுவரப்பட்ட பிறகு, வருவாய் கணிசமாக அதிகரித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஊரடங்கால் பூங்கா மூடப்படுவதற்கு முன்பாக, பென்குயின்களை பார்ப்பதற்காக மட்டுமே சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த பென்குயின்களை 3 ஆண்டுகள் பராமரிப்பதற்கு 15 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது அம்மாநிலத்தில் விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.