1020 நாட்களுக்குப் பிறகு, தனது 71வது சததை அடித்து அசத்தியுள்ளார் இந்திய அணியின் ரன் மிஷின் (Run Machine ) கோலி, எனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பிறகு, இந்திய அணியின் கேப்டன் ரோஹித், கோலி அடித்த சதம் குறித்து பேட்டி எடுத்தார், அப்போது மனம் திறந்து பல விஷயங்களை பேசினார் கோலி, முதலில் தனது கடினமான காலகட்டத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த அணி நிர்வாகத்திற்கும் , ரோஹித் அவர்களுக்கும் நன்றி கூறினார் கோலி, அதிலும் அணி நிர்வாகத்தின் குறிக்கோள் மிக தெளிவாக இருக்கிறது, இதனால் நான் பல ஆட்டங்களில் சொதப்பினாலும் மீண்டும் நிதானமாக விளையாட அனுமதித்தார்கள், நான் ஓய்விற்கு பிறகு அணியில் இணைந்தபோதும் என்னை நன்றாக அரவணைத்தார்கள் என்றார், மேலும் விராடின் சதம் குறித்து ரோஹித் கேள்வி கேட்டார்,
அப்போது விராட் நான் டி 20 யில் சதம் அடிப்பேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, என் நானே எதிர்பார்க்கவில்லை, அதிலும் பவர் ஹீட்டிங் எனது பலம் கிடையாது, நான் கேப்புகளில் விளையாட நினைத்தேன் அதனை கவனத்தில் கொண்டு செயல்பட்டேன், யாரும் எதிர்பார்க்காத போது டி -20யில் சதம் அடித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது, இதனால் நன்றியுடனும் மற்றும் கெளரவமாகவும் இருந்தது என்றார் தொடர்ந்து கோலி பேசுகையில், டி – 20 உலக கோப்பைக்கு முன்னால் பலம்வாய்ந்த australia மற்றும் south africa அணிகளுடன் மோதுவதால் உலக கோப்பையின் முதல் போட்டியில் இருந்தே நாங்கள் தயாராக இருப்போம் என்று கூறினார், மேலும் பேட்டியின் தொடக்கத்தில் அதிகமாக ஹிந்தியில் ரோஹித் பேசியதால், விராட் அதற்கு இதுவரை முழுசாக ஹிந்தியில் எந்த ஒரு interview களிலும், ரோஹித் இப்படி பேசியதில்லை என்று நகைச்சுவையாகவும் பேசி இருந்தார்கள், கோலி எந்த அளவிற்கு சிறப்பாக விளையாடினார்.