குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டி

2194

டெல்லியில் நடைபெற்ற 17 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், குடியரசுத்தலைவர் வேட்பாளர் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்தக்கூட்டத்தில், யஷ்வந்த் சின்ஹா குடியரசுத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

85 வயதான யஷ்வந்த் சின்ஹா, 24 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்துள்ளார்.

வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை, நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார்.

முன்னதாக சந்திரசேகர் அமைச்சரவையிலும் நிதியமைச்சராக பொறுப்பு வகித்திருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு பாஜக-வில் இருந்து விலகினார்.

2021-ம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா, வரும் 27 ம்தேதி வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.