டிசம்பரில் தங்கம் விலை என்னவாகும்? நிபுணர்கள் வெளியிட்ட கணிப்பு!

தங்கத்தின் விலை உயர்வதையும் குறைவதையும் அமெரிக்க டாலரின் மதிப்பு, சர்வதேச சந்தை நிலவரம், போர் பதற்றங்கள், அரசியல் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவுகள் தீர்மானிக்கின்றன. இந்நிலையில், அமெரிக்க அரசுப் பத்திரங்களின் ஈவுத்தொகை குறைந்திருப்பது தங்கச் சந்தையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் தற்போதைய நிலையையே தொடர முடிவு செய்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 29ஆம் தேதி அமெரிக்க அரசுப் பத்திரங்களின் ஈவுத்தொகை சரிந்தது. 10 ஆண்டுகால பத்திரங்களின் ஈவுத்தொகை 5 அடிப்படைப் புள்ளிகள் குறைந்து 4.9 சதவீதமாகவும், 2 ஆண்டுகால பத்திரங்களின் ஈவுத்தொகை 4.683 சதவீதமாகவும் பதிவானது. 30 ஆண்டுகால பத்திரங்களின் ஈவுத்தொகையும் 5.329 சதவீதமாகக் குறைந்தது.

பத்திரங்களின் ஈவுத்தொகை குறையும்போது தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தங்கத்தின் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், பணவீக்கம் கட்டுக்குள் வராததால் டிசம்பரில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். வட்டி உயர்ந்தால் டாலர் மற்றும் அரசுப் பத்திரங்களில் முதலீடு அதிகரித்து, தங்கத்தின் விலை குறையக்கூடும்.

எனவே, டிசம்பரில் தங்கத்தின் விலை உயருமா, குறையுமா என்பது அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்தகட்ட முடிவைப் பொறுத்தே அமையும். விலை குறைந்தால் தங்கம் வாங்கக் காத்திருப்போருக்கு அது சாதகமான வாய்ப்பாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும், எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும் என்பது முக்கியம்.

Related News

Latest News