தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற பாமக கவுரவ தலைவர் ஜி.கே மணி இல்ல திருமண விழாவில் பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் : தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்க முடியும் என்று மத்திய அரசு கூறுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
மத்திய அரசுக்கு மும்மொழி கொள்கை, திமுகவிற்கு இரு மொழி கொள்கை உள்ளது என்றும் ஆனால் பாமகவிற்கு ஒரு மொழி கொள்கதான் என்பதால் தாய் மொழியை போற்றி வளர்ப்போம். தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக, இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.