மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
கல்வியை அரசியலாக்க வேண்டாம். மாணவர்களின் நலனுக்காக தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கடிதம் குறித்து பதிலளித்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்வி நிதியை கேட்டால், மும்மொழியை கொள்கையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு சொல்கிறது. மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டோம். இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது என்று பதிலளித்துள்ளார்.