Monday, April 28, 2025

உத்தரப் பிரதேசத்தை வளமான மாநிலமாக மாற்றுவோம் – முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி

வறுமை ஒழிப்பதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தை வளமான மாநிலமாக மாற்றுவோம் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மகாராஜ்கஞ்சில் உள்ள ரோஹின் தடுப்பணை திறப்பு விழாவிற்காக வருகைதந்த ஆதித்யநாத் பேசியதாவது : கடந்த 1980-களில் ஏழ்மையான மாநிலங்களில் பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது.

வறுமை ஒழிப்பதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தை வளமான மாநிலமாக மாற்றுவோம் என கூறினார். மேலும் மகாராஜ்கஞ்ச் இனி பின்தங்கிய மாவட்டம் அல்ல என்றும் அவர் கூறினார்.

Latest news