ஜி.எஸ்.டி.,க்குள் பெட்ரோல், டீசல்? – நிதியமைச்சர் சொன்ன தகவல்!

239
Advertisement

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரை, ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க, ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் பல்வேறு மாநிலங்கள் இதை ஏற்க மறுத்ததை அடுத்து, கூட்டத்தில் இந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டதாக கூறினார்.

இது குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என்றும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு இது சரியாக நேரம் இல்லை என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.