விஜய் பிரச்சாரம்… ரோடு ஷோ நடுவே புதுமண தம்பதிக்கு விஜய் வாழ்த்து… வைரலாகும் வீடியோ…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உற்சாகமான ரோடு ஷோ நடத்தி வருகிறார். அவரை நேரில் காண ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெரும் திரளாக கூடினர். முழு பகுதியும் விழாக்கோலம் போல் காணப்பட்டது. மக்கள் ஆரவாரத்திற்கிடையே விஜய் தனது வாகனத்தில் நின்றபடி கைகளை அசைத்து படி சென்றார்.

இந்த நிகழ்வின் போது ஒரு சிறப்பு தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கொளப்பஞ்சேரி அருகே புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் விஜயை சந்திக்க ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் விருப்பத்தை கவனித்த விஜய் தனது பிரச்சார வாகனத்தை நிறுத்தினார். பின்னர் அந்த புதுமண தம்பதியை நேரில் அழைத்து வாகனத்தில் ஏற்றினார்.

விஜய் அவர்களுக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துகளை தெரிவித்ததுடன், இனிய வாழ்க்கை அமைய ஆசீர்வதித்தார். இந்த எதிர்பாராத சந்திப்பு அந்த தம்பதியினருக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறியது.

விஜயை சுற்றியிருந்த ரசிகர்கள் இந்த காட்சியை பார்த்து உற்சாகக் கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, விஜய் அந்த தம்பதியினரை வாழ்த்தி அனுப்பி வைத்து தனது ரோடு ஷோவை நீண்டும் தொடங்கினர்.

Related News

Latest News