Monday, January 19, 2026

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. தலைமையில் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

மாநில பாஜக தலைவர் பதவிக்கு அவர் ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்த நிலையில் வி.பி.ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட வி.பி.ராமலிங்கம் நாளை மதியம் முறைப்படி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Related News

Latest News