உத்தரப்பிரதேசத்தில் போலீசார் நடத்திய தாக்குதலை மிக அழகான காட்சி என்று முன்னாள் டிஜிபி அஸ்தானா வருணித்திருப்பது பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
நபிகள் நாயகம் அவதூறு செய்யப்பட்டதைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் போராடிய இஸ்லாமியர்களை கைது செய்து போலீசார் கடுமையாக தாக்கினர்.சிலரது வீடுகளும் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டன.
இதற்கு மனித உரிமை ஆர்வலர்களும் முன்னாள் நீதியரசர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கேரள மாநில முன்னாள் டிஜிபியான அஸ்தான் தாக்குதல் காட்சிகளை பதிவிட்டு இது மிகவும் அழகான காட்சி எனவும் மனதுக்கு ஆறுதல் தரும் காட்சி என்றும் வருணித்துள்ளார்.
இது ஆளிவிதையில் ஊறவைக்கப்பட்ட மூங்கில் கம்புகள்தான் அடிக்க வசதியானவை என்றும் பத்திரிகையாளர்களை கழுதைகள், முட்டாள்கள் என்றும் மனம்போன போக்கில் வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார் அஸ்தானா.அவரது சட்டவிரோத, அநாகரீக கருத்துகளுக்கு மனித உரிமை ஆர்வலர்களும் பத்திரிகையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஒடிஷா மாநில கூடுதல் டிஜிபி அருண்போத்ராவே அவரை கடுமையாகச் சாடியுள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகளை புகழாதீர்கள், காவல்துறை நீதிமன்றங்கள் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.