உத்தரபிரதேசத்தில் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ரெஹான் என்ற இளைஞர் கடந்த 2ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாடு கடத்தல் கும்பலுக்கு உதவிய புகாரில் படாவுன் போலீசார் ரெஹானை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
கொடூரமாக சித்திரவதைக்கு ஆளான ரெஹான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரெஹானிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக ரெஹானின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
போலீசாரின் விசாரணைக்குபின் ரெஹானால் பலத்த காயம் அடைந்து, நடக்கவோ, பேசவோ முடியவில்லை என்றூம் மின்சாரம் பாய்ச்சி விசாரணை நடத்தியதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
பல மணி நேரம் காவலில் இருந்த ரெஹானை விடுவிக்க காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று போலீசார் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பின்னர், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததை அடுத்து, ரெஹானை போலீசார் விடுவித்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் காவலர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.