தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவா? திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா? நடந்தது என்ன?

தமிழக வெற்றி கழகம் சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநில அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டாததால், ஆட்சியை அமைப்பதற்காக மற்ற கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுக்கு தனது ஆதரவை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம், த.வெ.க.வின் பலம் 116 எம்.எல்.ஏ.க்கள் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், ஆட்சியை அமைக்க தேவையான பெரும்பான்மையை எட்ட இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது கட்சியின் நிலைப்பாட்டை இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த திருமாவளவனை சந்திக்க தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளார். விசிக ஆதரவு கடிதத்தை பெறுவதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், திருமாவளவன் தலைமையிலான விசிக, த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

Related News

Latest News