Thursday, March 27, 2025

‘நான் அரசியலுக்கு வந்தது சிலருக்கு எரிச்சலை கொடுத்துள்ளது’ – தவெக விஜய் பேச்சு

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்று 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2ம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரம் அருகே நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இந்தி திணிப்பு, மும்மொழிக்கொள்கை ஆகியவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், #Getout இயக்கத்தை கையெத்திட்டு அக்கட்சியின் தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் மேடையில் பேசியதாவது : அரசியலுக்கு யார் வேணும்னாலும் வரலாம். அதுவே மக்களுக்கு பிடித்த நபராக இருந்தால் நல்லவர்கள் வரவேற்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு எரிச்சல் வரத்தானே செய்யும் என்று அவர் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழக வெற்றிக் கழகம் எளிய மக்களுக்கான கட்சி, இது ஒன்றும் பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது. நாட்டு நலனை பற்றியோ, வளர்ச்சியை பற்றியோ அரசுக்கு எந்த கவலையும் இல்லை. அவர்களுது நோக்கம் பணம் மட்டுமே. இப்படிப்பட்டவர்களை அரசியலை விட்டே அகற்ற வேண்டும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளோம் என அவர் பேசியுள்ளார்.

Latest news