மாற்றுக் கட்சியினர் ஹெலிகாப்டரில் வந்து தவெகவில் இணைந்தாலும் அவர்களுக்கு பதவி வழங்கப்படாது, கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கே பதவி என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசியுள்ளார்.
விழுப்புரத்தில், தவெக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் , தவெகவில் தலைவர் விஜய்க்கு அடுத்த இடத்தில் பொதுச்செயலாளர் என்பதால் தனக்கு இந்த மரியாதை கிடைக்கவில்லை எனவும், அனைத்தும் தலைவருக்குதான் எனவும் மேடையில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மாற்றுக் கட்சியினர் ஹெலிகாப்டரில் வந்து தவெகவில் இணைந்தாலும், அதற்காக அவர்களுக்கு விஜய் பதவி வழங்க மாட்டார் என கூறிய ஆனந்த், கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு தான் பதவி என கூறினார்.