டெல்லியில், விடுதலை போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசம் என்று விமர்சித்தார்.
டெல்லியில் பா.ஜக ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்தில் அரசு அலுவலகங்களில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்களை அகற்றி இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
பகத்சிங்கை விட இந்த நாட்டுக்காக அதிக தியாகம் செய்தவர்கள் இருக்கிறார்களா? என்றும், அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் கனவுகளை நனவாக்கவே ஆம் ஆத்மி அரசியலுக்கு வந்து இருக்கிறது எனவும் அதிகாரத்துக்காக வரவில்லை எனவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.