Saturday, June 7, 2025

நகைப் பிரியர்கள் ஹேப்பி : மீண்டும் குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.67,200 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.8,400 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.66,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.8,310 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news