நகை பிரியர்களே… தங்கம் விலை அதிரடி சரிவு… இன்றைய நிலவரம்…

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.13,450-க்கும், ஒரு சவரன் ரூ.1,07,600-க்கும் விற்பனையானது. பின்னர் விலையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்ட நிலையில், மார்ச் 23-ஆம் தேதி ஒரு கிராம் ரூ.13,340-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,720-க்கும் விற்கப்பட்டது.

அதன்பிறகு தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. இந்த மாதம் 1-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்பனையாகி ஆண்டின் உயர்ந்த விலையை எட்டியது. ஆனால் அதன் பின்னர் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. குறிப்பாக கடந்த 15-ஆம் தேதிக்குப் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13,560-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,480-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்றைய வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.210 மற்றும் சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,350-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120-க்கும், கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.13,140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் போலவே வெள்ளி விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.230-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளியின் விலை ரூ.2,30,000 ஆக உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,360 வரை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலைச் சரிவு நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது

Related News

Latest News