Sunday, December 7, 2025

தீபாவளி பரிசாக இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,200-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 250 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,950-க்கும் சவரனுக்கு 2000 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.13 குறைந்து ரூ.190க்கு விற்கப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ (பார்) வெள்ளி ரூ.13,000 குறைந்து ரூ.1,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News