தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகளை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, பொதுத் தகுதிக்கான நிபந்தனைகள், வயது வரம்பு சலுகைகள், இட ஒதுக்கீடு, பாடத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் உள்ளிட்டவற்றை TNPSC வெளியிட்டுள்ளது.
நடைமுறையில் இருந்து வரும் One time registration எனப்படும் ஒருமுறை பதிவு 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு விண்ணப்பத்தில் புகைப்படம், கையொப்பம் தெளிவாக இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலின விண்ணப்பதாரர்கள் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட ஒட்டுமொத்த அறிவுரைகளை www. tnpsc.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.