தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்கிறார்.
அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
தமிழக ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நாகாலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக அறிவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
கொரோனா காலக்கட்டம் என்பதால் கிண்டி, ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.